மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராமர் கோயிலுக்கு வராதவர்கள் துர்புத்தி கொண்டவர்கள் - கங்கனா ரனாவத்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கன ரானாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி மற்றும் சந்திரமுகி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்து வருவார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பல்வேறு துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளிடம் பேசிய அவர், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் நிறைய புண்ணியம் பெறுகிறார்கள். வாடிகன் நகரத்திற்கு உலகளவில் முக்கியத்துவம் இருப்பதை போன்று அயோத்தி ராமர் கோயில் நமக்கு முக்கியம். ராமர் கோயிலுக்கு துர்ப்புத்தி கொண்ட சிலர் வர மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.