மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு இத்தனை கோடி சம்பளமா? எவ்வளவு தெரியுமா?
ஒட்டுமொத்த இந்தியாவுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள். சினிமா நடிகையாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா பின்னர் அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.
தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாகும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் விஜய். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் நயன்தாரா ஜெயலலிதா வேடத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் கங்கனா ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு சுமார் 24 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கங்கனா ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ஹிந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்குக்கும் கங்கானாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.
மேலும், ஒரு பாலிவுட் நடிகைக்கு தமிழில் இவ்வளவு சம்பளம் கொடுப்பதும் இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. அதேபோல், கங்கனா ஜெயலலிதாவாக நடித்தால் படம் நிச்சயம் வெற்றிபெறும் எனவும் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாக்கி வருகிறது தலைவி திரைப்படம்.