#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது!! செம காட்டத்தில் தாம்தூம் நடிகை! எதனால் தெரியுமா??
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழில் தாம்தூம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தால் மன உளைச்சலாலே சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கங்கனா, சுஷாந்த் சிங்கின் பிறந்த நாளான இன்று அவரது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Never forget Sushant spoke about YashRaj films banning him,He also spoke about Karan Johar showing him big dreams and dumping his film on streaming, then crying to the whole world that Sushant is a flop actor. Never forget all Mahesh Bhatt children are depressed yet he told(cont)
— Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021
அதில், அன்புள்ள சுஷாந்த், திரைப்பட மாஃபியா உங்களை தடை செய்தது, உங்களை துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டிருக்கிறாய். அப்போது உன்னுடன் நான் உறுதுணையாக நிற்கவில்லையே என்று வருந்துகிறேன். சுஷாந்த் சிங் தன்னுடைய பேட்டிகளில் வாரிசு அரசியலை பற்றி குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய ப்ளாக்பஸ்டர் படங்கள் அனைத்தும் தோல்விப்படங்களாக அறிவிக்கப்பட்டது.
மேலும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தன்னை தடை செய்தது குறித்தும், கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றி சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என்று கூறியது குறித்து சுஷாந்த் அழுததை மறந்துவிட வேண்டாம். எல்லோரும் சேர்ந்து
சுஷாந்த்தை கொன்றுள்ளனர். இதனை மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது என கங்கனா காட்டமாக கூறியுள்ளார்.