மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வீடு வீடாக சென்று பணம் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்" வடிவேலு குறித்து சர்ச்சையை கிளப்பிய கஞ்சா கருப்பு..
தமிழில் முன்னணி காமெடி நட்சத்திரமாக இருந்து வந்தவர் வடிவேலு. இவர் 80களின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் இவர் மேல் எழுந்த தொடர் சர்ச்சையின் காரணமாக திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் வடிவேலு. இதன் பின் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாக 24ஆம் புலிகேசி, எலி, நாய் சேகர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதன் பின்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வெகுவாக மக்களை ஈர்த்தது.
இது போன்ற நிலையில் வடிவேலுடன் நடித்த துணை காமெடி நடிகர்கள் பலரும் வடிவேல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தற்போது காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வடிவேலுவை குறித்து "வடிவேலு யாருக்கும் உதவி செய்ய மாட்டார். யாருடைய வீட்டிற்காவது சென்றால் பெட்ரோலுக்கு காசு கொடுங்கள் என்று கட்டாயப்படுத்தி வாங்கி கொள்வார். அதனால் தான் அவர் இந்த உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.