மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் நலக்குறைவால் பிரபல முன்னணி இயக்குனர் திடீர் மரணம்.! சோகத்தில் உறைந்த திரையுலகம்.!
பிரபல கன்னட இயக்குனர் எஸ்.கே பகவான் இன்று மரணமடைந்த நிலையில் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னட சினிமாவில் பிரபல மூத்த இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.கே பகவான். அவரது இயக்கத்தில் வெளிவந்த கஸ்தூரி நிவாஸ், பயலு தாரி, கிரி கன்யே உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
கே.எஸ் பகவான் தனது நண்பர் துரைராஜுடன் இணைந்து 55 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். பெரும்பாலும் அவர் தான் இயக்கும் படங்களில் ராஜ்குமாரையே ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் எஸ்.கே பகவான் கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவு கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குனர் எஸ்.கே பகவான் மறைவிற்கு கர்நாடக முதல்வர் முதல்வர் பசவராஜ் பொம்மை, கன்னட திரையுலகின் தூணாக இருந்த எஸ்.கே பகவானின் மரணம் குறித்த தகவலை கேட்டு தான் மிகவும் வருத்தப்பட்டதாக இரங்கல்களை தெரிவித்துள்ளார்.