மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி மேக்னாவின் வளைகாப்பில் மறைந்த கணவர் சிரஞ்சீவி இருந்திருந்தால்... பார்ப்போரை கண்கலங்க வைக்கும் தத்ரூப புகைப்படம்!
பிரபல நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தனது 39 வயதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. அவர் கணவர் இறந்த போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக மேக்னாவிற்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
அப்பொழுது மறைந்த அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவாக அவரது ஆளுயர கட்அவுட் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்திருந்தது.
🙏🙏🙏 pic.twitter.com/sH0DCQkkyx
— karan acharya (@karanacharya7) October 5, 2020
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மேக்னாராஜ் வளைகாப்பில் அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜா இருப்பது போன்று புகைப்படத்தை எடிட் செய்து தருமாறு பிரபல ஓவியரும், கிராபிக் டிசைனருமான கரண் ஆச்சார்யாவிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் கரண் ஆச்சார்யா தனது கர்ப்பிணி மனைவி மேக்னாவை, சிரஞ்சீவி சார்ஜா கைதாங்கலாக பிடித்து செல்லுமாறு புகைப்படத்தை எடிட் செய்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.