மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இப்படியொரு வேடத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா! படக்குழுவினரை தலை சுற்றவைத்த நடிகை கரீனா கபூர்!!
சினிமாத்துறையில் இதிகாசங்களை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் இயக்குனர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் இராமாயணம் கதையை பலரும் படமாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு தெலுங்கில் ராம ராஜ்ஜியம் பெயரில் ராமாயணம் படமாக வெளியானது. அதில் ராமராக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். நயன்தாரா சீதாவாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயணம் கதை படமாக உருவாகி வருகிறது. இந்தநிலையில் 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் சீதையின் பார்வையில் இராமாயணத்தை படமாக்க உள்ளனர். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குநரான தேசாய் இயக்கவுள்ளார். இதில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை அணுகியுள்ளனர்.
ஆனால் அவர் சீதாவாக நடிக்க 12 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். ஆனால் இவர் இதற்கு முன்பு நடித்த படங்களில் 8 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் வரை நடக்கும் என்பதால் அதிக தொகையை சம்பளமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், வேறு நடிகையை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.