திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
96 பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி.. வெளியான அசத்தல் அப்டேட்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கிராமத்து கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்காக நடிகர் கார்த்தி தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த ஸ்வாதி தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.