தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நெஞ்சை உலுக்குது! தயவுசெஞ்சு விரைவில் அரசு இதை செய்யவேண்டும்! மிகுந்த வருத்தத்துடன் நடிகர் கார்த்தி விடுத்த கோரிக்கை!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகரும், உழவன் அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும் பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.
நாளும் பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு,கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலை தூரம் பயணித்து வந்து வீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.
Let’s not forget our farmers!#FarmersProtest pic.twitter.com/m5sqnkf9HD
— Actor Karthi (@Karthi_Offl) December 3, 2020
தண்ணீர் பற்றாக்குறை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் இன்னும் மிக மோசமாக பாதிப்படையும் என கருதுகிறார்கள்.
தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும் தங்கள் விளைபொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெருமுதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும் ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது .ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.