மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியின் பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி வரும் காட்சி.! நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது பேட்ட திரைப்படம். இந்த படத்தில் தனது மனைவி ஒரு காட்சியில் வருவார். அது எந்த காட்சி என கண்டுபிடித்து கூறுமாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு இது சம்மந்தமாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலையே இருக்கும் நெட்டிசன்கள் கார்த்திக் சுப்புராஜின் மனைவி வரும் காட்சியை கண்டுபிடித்துள்ளனர்.
பேட்ட படத்தில் ரஜினி கல்லூரியின் வார்டனாக பணியில் சேர்வதற்கு வரும் போது ரஜினிக்கு ஒரு பெண் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் கொடுப்பர். அவர்தான் கார்த்திக் சுப்புராஜின் மனைவி என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றனர்.