மீண்டும் இணையும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' கூட்டணி.. அசத்தல் அப்டேட்!



Karthik Yogi direct Santhanam and Arya

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். தற்போது இவர் ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Arya

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, லொள்ளு சபா சேசு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் எந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியது. அதற்கு காரணம் சந்தானம் பேசிய ராமசாமி என்ற வசனம்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Arya

இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சந்தானம் எந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும், ஆர்யாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளோம். அது ஒரு அட்வென்சர் திரைப்படமாக இருக்கும். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு உருவாகும் என கூறியுள்ளார்.