#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகாசூரனில் நடித்த செல்வராகவனை செருப்பால் அடித்த அவரது தந்தை கஸ்தூரி ராஜா..!? காரணம் தெரியாமல் ரசிகர்கள் வருத்தம்...!
கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவரது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் இவரின் சகோதரர். படங்களை இயக்குவதை மட்டும் தொழிலாக கொண்ட செல்வராகவன் தற்போது நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
இவர் நடித்த பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன், போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. சமீபத்தில் இவர் நடித்த பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.
இதுபோன்ற நிலையில், இவர் யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "தனக்கு சினிமா மேல் இருந்த ஆர்வத்தினால் படிக்க விருப்பமில்லை. எனது தந்தை நான் நன்றாக படிக்க வேண்டுமென்று வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை என்று என் தந்தை கஸ்தூரி ராஜா என்னை செருப்பால் அடித்தார்" என்று கூறியிருக்கிறார்.
இதன் பின்பும், செல்வராகவனுக்கு இருந்த சினிமா ஆசையை அவரது தந்தை கஸ்தூரி ராஜா புரிந்து கொண்டு படத்தின் இயக்குனர் வாய்ப்பை பெற்று கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் செல்வராகவன் போன்ற இயக்குனர் இல்லையென்றால் தனுஷ் போன்ற முன்னணி நடிகர் இருந்திருக்க மாட்டார். ஏனென்றால் தனுஷின் நடிப்பு திறமையை செதுக்கியதற்கு செல்வராகவனின் பங்கு மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.