தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு கவலை வேண்டாம்.! திமுகவை மரண கலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி.!



Kasthuri talk about dmk

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. அடுமட்டுமல்லாமல் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மின் கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டி தனது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வரும் நடிகை கஸ்தூரியும் திமுக அரசை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான்.  ஆனால்  கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம்  அரசாங்கம் அடிக்கடி  power cut செய்து மக்களுக்கு உதவும்  என்ற நம்பிக்கை உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.