திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்படிக்கூடவா பதிவை போடுவாங்க... கஸ்தூரியின் பதிவால் கொந்தளிப்பில் ரசிகர்கள்!!
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என ட்வீட் செய்து #mrPREGNANT " என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இது மூன்றாவது குழந்தையா என கேள்வி எழுப்பினர்.
ஒரு சிலர் கஸ்தூரி நிச்சயம் கர்ப்பமாக இருக்கமாட்டார். எதாவது படம் அல்லது சீரியலுக்கான கெட்டப்பாகத்தான் இருக்கும் என்று கூறிவந்தனர். இவை அனைத்திற்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தார் கஸ்தூரி. தற்போது ரசிகர்கள் நினைத்தது சரிதான் என்னும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'மிஸ்டர் பிரக்னண்ட்' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அந்த படத்தின் கெட்டப் தான் இந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் தான் இது.
மேலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் இந்த புகைப்படத்தை ஏமாற்ற பயன்படுத்திக் கொண்டதாகவும் உண்மையில் நான் கர்ப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்பதிவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் இப்படிக்கூடவா பதிவை போடுவாங்க என்றும் கேட்டு வருகின்றனர்.