மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவுக்கு டஃப் கொடுக்க தயாரான ஏ.ஆர் ரகுமானின் மகள்.!குவியும் வாழ்த்துக்கள்!! ஏன் தெரியுமா??
திரைத்துறையில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து வெற்றிகரமான, முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி இசையமைப்பாளரானார்.
ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல தேசிய விருதுகளை பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன். இவரும் பாடகராக கலக்கி வருகிறார். இசை ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். அவரது மூத்த மகள் கதீஜா ரகுமானும் தனது இனிமையான குரலில் பாடல்களை பாடியுள்ளார். எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு கடந்த ஆண்டு தான ரியாசுதீன் ஷேக் என்ற சவுண்ட் இன்ஜினியருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
So happy to be working with this exceptional talent, Khatija Rahman for #MinMini. The euphonious singer is a brilliant music composer too. Some great music underway! ✨✨@RahmanKhatija @manojdft @Muralikris1001 @_estheranil_ @GauravKaalai @Pravin10kishore @raymondcrasta pic.twitter.com/b9k1YjuxtU
— Halitha (@halithashameem) June 12, 2023
இதுகுறித்து ஹலீதா தனது டுவிட்டர் பக்கத்தில், மின்மினி படத்துக்காக திறமைமிக்க கதீஜா ரகுமானுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. சிறந்த பாடகி மட்டுமல்ல, இவர் சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை வந்துகொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கதீஜாவுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கதீஜாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.