மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுமட்டும் நிறைவேறிவிட்டால்.. அருள்கூர்ந்து ஆதரவு தாருங்கள்.! கவிஞர் வைரமுத்து விடுத்த கோரிக்கை!!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து அண்மையில் மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக கோரிக்கை ஒன்றை வைத்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
கவிஞர் வைரமுத்து பதிவு
வங்கக் கடல்போல் நிகழ்ந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன்
'தமிழ்நாட்டின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்கவேண்டும்' என்றேன்
நான் பேசிமுடித்த மறுகணமே 'அப்படியே செய்து முடிப்போம்' என்று அறிவித்தார் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா
நான் மகிழ்ந்துபோனேன்
எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த ஒரு குழு அமைப்போம்; அரசின் பெருந்துணையும் கோருவோம்
இதுமட்டும் நிறைவேறிவிட்டால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும்; வாசிப்போர் நாவில் தமிழ் தவழ்ந்தோடும்
தள்ளிப் போடுவதால் லட்சியங்கள் தள்ளாடிப்போகின்றன
விரைந்து செயல்படுவோம் அருள்கூர்ந்து ஆதரவு தாருங்கள் எனக் கூறியுள்ளார்.
வங்கக் கடல்போல் நிகழ்ந்த
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2024
வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு மாநாட்டில்
ஒரு பெருங்கோரிக்கை வைத்தேன்
'தமிழ்நாட்டின்
அனைத்து வணிக நிறுவனங்களின்
பெயர்ப் பலகைகளும்
தமிழில் விளங்கவேண்டும்' என்றேன்
நான் பேசிமுடித்த மறுகணமே
'அப்படியே செய்து முடிப்போம்'
என்று அறிவித்தார்
மாநிலத் தலைவர்…