மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களை கவரும் வகையில் காதலர் தினத்தில் வெளியாகும் கவின் படம்... பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். அதனை தொடர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை மேலும் கொள்ளை கொண்டார்.
பிக்பாஸ்க்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நட்புனா என்னனு தெரியுமா, டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்டார் திரைப்படத்தை வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலர் தினத்தில் வெளியாக இருப்பதால் கண்டிப்பாக இளசுகளை கவரும் வகையில் ஸ்டார் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.