மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. கண்ஜாடையில் கட்டிப்போட்ட காவியா அறிவுமணி..! கண்ணெடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!!
நடிகை காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் முக்கிய இடத்தில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், வெங்கட், ஹேமா, குமரன், காவியா அறிவுமணி மற்றும் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா இறந்த பின், முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். இவர் வந்த முதலில் முல்லை கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ரசிகர்களால் கருதப்படாத நிலையில், இவரது விடாமுயற்சிக்கும், நடிப்பு திறமைக்கும் பின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகை காவியா அறிவுமணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தலை சாய்த்து பார்த்தாலே, தடுமாறிப் போனேனே என்றும், பாக்க பாக்க ஆசையா இருக்கு என்றும் கமெண்ட்களை செய்து வருகின்றனர்.