மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாந்தனுவை ஓரம்கட்டிவிட்டு முன்னுக்கு வந்த கீர்த்தி சாந்தனு..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சாந்தனு. இவர் பாக்யராஜின் மகனாவார். 'வேட்டிய மடிச்சு கட்டு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். இதன் பின்பு 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
முதல் படத்திலேயே இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வந்ததோடு, பெண் ரசிகர்களும் அதிகமாகினர். நடிப்பு திறமை, அழகு மற்றும் நடனத் திறமை இருந்தாலும் இவரின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறுவதில்லை.
ஆனாலும் விடாமுயற்சியுடன் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்து வரும் சாந்தனு, சமீபத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மாஸ்டர்' திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியதிலிருந்து இவரின் அளப்பறை இணையத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் திரைப்படம் வெளியாகிய பின் இவரின் கதாபாத்திரம் அந்த அளவிற்கு இல்லை என்பதால் ரசிகர்கள் இவரை கலாய்த்து வந்தனர்.
இதனால் அடக்கி வசிக்கும் சாந்தனு தற்போது 'ராவணன் கோட்டம்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்று பெரிதளவில் பேசப்பட்டது. இதன்படி சாந்தனுவின் மனைவியான கீர்த்தி 'ராவணன் கோட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள பாட்டிற்கு நடனமாடிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவில் சாந்தனுவை பின்னுக்கு தள்ளி கீர்த்தி சாந்தனுவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.