மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கலர்புல் உடையில் கீர்த்தி ஷெட்டி!" போட்டோஸ் வைரல்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் 2021ம் ஆண்டு "உப்பேனா" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும் 2022ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப் படமாக வெளியான "போர்வீரன்" படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2022ம் ஆண்டு தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதும் வென்றுள்ளார் கீர்த்தி ஷெட்டி. மேலும் சூர்யா நடிக்கவிருந்த "வணங்கான்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருந்தார்.
ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதால், அவரைத் தொடர்ந்து கீர்த்தி ஷெட்டியும் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். தமிழில் நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கும் கீர்த்தி ஷெட்டி, ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.
அதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். மூன்று நாயகிகளில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் கருப்பு நிற உடையணிந்து போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.