திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. வேற லெவல் என்ஜாய்மென்ட்.! தளபதியின் ஹிட் பாடலுக்கு ரசிகர்களுடன் ஜாலி ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! வைரல் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத, முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து அவர் நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் மற்றும் ஜெயம் ரவியுடன் சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா உள்ளிட்ட சில படங்கள் அவரது கைவசம் உள்ளது.
இந்நிலையில் அண்மையில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனிருத் தளபதி விஜய்யின் குட்டிஸ்டோரி பாடலை பாடிய போது கீர்த்தி சுரேஷ் கூட்டத்தில் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kutti Story Vibe ❤️ @KeerthyOfficial
— Filmy Kollywud (@FilmyKollywud) October 31, 2022
pic.twitter.com/NWHOVAoSAJ