மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரகுதாத்தா படத்தின் செகண்ட் கிளிம்ப்ஸ்.. எழுதியிருந்த இந்தியை அழித்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் தற்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தற்போது 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகும் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தேவதர்ஷினி, எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் போன்றவர்களும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் கரும்பலகையில் "hindi world of the day" என்று எழுதி இருந்தது. இதை ஆசிரியராக நடித்த கீர்த்தி சுரேஷ் ஹிந்தி என்ற வார்த்தையை மட்டும் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.