மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரம்மாண்டம்தான்! இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் கட்டி வந்த புடவையின் விலை இத்தனை லட்சமா??
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவரது நடிப்பில் உருவான ரகு தாத்தா படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் அண்மையில் நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் அனைவரையும் கவரும் வகையில் அட்டகாசமான புடவையில் வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவையை கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.