ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!



keerthi suresh sleeping video goes viral

முதல் படமே வெற்றி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் அவர் நடிப்பில் வெளியாகிய முதல் திரைப்படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் உடல் எடை அதிகரித்ததால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

காதலரை கரம்பிடித்த கீர்த்தி

அதன் பிறகு உடல் எடையை குறைத்து கம் பேக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்க்கு சமீப காலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த டிசம்பர் 12ல் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றது.

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?

keerthi Suresh

பேபி ஜான் ப்ரோமோ நிகழ்ச்சி

அடுத்ததாக வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷின் பேபி ஜான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீர்த்தி சுரேஷ் மேக்கப் போட்டுக் கொண்ட போது எடுத்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

பரிதாப நிலையில் நடிகை

அதற்கு காரணம் திருமணம் மற்றும் பட வேலைகள் என்று படு பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் பிசியாக இருக்கிறார். இப்படி அவர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவரை மீறி நாற்காலியில் அமர்ந்து கொண்டே தூங்குகிறார். இந்த வீடியோவை யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது ரசிகர்களிடம் தற்போது பரிதாபத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!