குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இதில் என்னோட கேரக்டர் இதுதான்.! வேற மாதிரி இருக்கும்.! மாமன்னன் குறித்து போட்டுடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க அவர்களுடன் பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. மேலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் திரைப்பிரபலங்கள், பட குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, “மாமன்னன் போன்ற ஒரு பெரிய படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்தப் படம் ரிலீசாகிறது. இதில் நான் ஒரு கம்யூனிஸ்டாக நடிக்கிறேன். இது வேறு மாதிரி வித்தியாசமான படமாக இருக்கும். அனைவரும் கனெக்ட் செய்துகொள்ளக் கூடிய கதையாக இந்த படம் இருக்கும் என கூறியுள்ளார்.