மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு! முத்தக்காட்சி இருப்பதால் சர்ச்சை!
சினிமாபயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி, பின்னர் அரசியலில் பல்வேறு இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் இயக்குனர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். இயக்குனர் பிரியதர்ஷினியும் அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்கி வருகிறார்.
இதனையடுத்து இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக குயின் என்கிற பெயரில் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குயில் ட்ரைலரில், ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும், முத்தக் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் வெளியான இந்த வெப் சீரிஸில் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருப்பது அதிமுகவினரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.