மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று என்ன நடந்தது.? கையில் காயங்களுடன் புகைப்படத்தை பதிவிட்ட KPY பாலா..
2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாலா. இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஜூங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்திப் பாண்டி, லாபம், நட்பு, நாய் சேகர், ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள், திரு மற்றும் திருமதி சின்னத்திரை, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் கேபிஒய் பாலா. இந்நிலையில் தனது பிறந்தநாளில் ஒரு முதியோர் இல்லத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது பாலா.
இதையடுத்து சமீபத்தில் கடம்பூர் மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நேரடியாகச் சென்று அடிப்படைத் தேவைகளான உணவு, பால் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தார் பாலா.
மேலும் நிவாரண நிதியாக 2லட்சம் வழங்கிய பாலா, தனது இன்ஸ்டா பக்கத்தில் "மனம் நிறைந்தது. விரல் உடைந்தது. நன்றி" என்ற கேப்ஷனுடன் தனது அடிபட்ட விரலின் புகைப்படத்தையும் பதிவிட்டுwள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.