மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவயதிலேயே ஹீரோயின் போல் இருக்கும் இந்த குட்டி குழந்தை எந்த நடிகை தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்..
தெலுங்கில் 2021 ஆம் வருடம் வெளியான உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி செட்டி. இப்படம் திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப் பெரும் வெற்றியடைந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி செட்டி. தெலுங்கை தொடர்ந்து தற்போது இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் திரைப்படங்கள் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது தமிழில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாக போகும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி செட்டி. இவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலேயே ஹீரோயின் போல் இவளோ அழகா இருக்காங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.