பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடஅட.. கொல்றீயேமா!! பச்சைநிற புடவையில் பளிச்சென இளசுகளை பாடாய்படுத்தும் க்ரீத்தி ஷெட்டி.! வைரல் புகைப்படங்கள்!!
தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அப்படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி உப்பென்னா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த க்ரீத்தி ஷெட்டிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது.
நடிகை க்ரீத்தி ஷெட்டி தி வாரியார், கஸ்டடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழில் சூர்யாவின் வணங்கான் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் பின்னர் அதிலிருந்து வெளியேறினார். அவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ஜீனி என்ற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகை க்ரீத்தி ஷெட்டி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது வித்தியாசமான, அழகழகான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். அந்த வகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், பச்சை நிற புடவை அணிந்து கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.