என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அட.. என்னா வாய்ஸ்! பாடகர்களையே மிஞ்சிடுவார் போல! குமரன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருந்தது. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட ஜோடி கதிர், முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடித்து வருபவர் குமரன். இவர் அசத்தலாக நடனமாடக் கூடியவர்.இவர் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கதிர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை மிகவும் அசத்தலாக பாடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.