மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரமுத்து எப்படிப்பட்டவர் தெரியுமா? குஷ்பு பரபரப்பு பேச்சு!
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார். இதே போல சிந்துஜா ராஜாராம் என்ற பெண்ணும் வைரமுத்து தன்னிடம் தவறாக பேசியதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த வைரமுத்து, சின்மயி புகாரில் உண்மையிருந்தால் அவர் வழக்கு தொடரட்டும் என கூறினார்.
இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு கூறுகையில் "கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
சில திரையுலகினர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிவந்தனர். இந்த நிலையில், நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.