வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
"வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது அவரவர் விருப்பம்!" நடிகை லதா ராவ்!
திருமதி செல்வம், மெட்டி ஒலி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் லதா ராவ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே சக சின்னத்திரை நடிகர் ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் லதா ராவ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, " அட்ஜஸ்ட்மென்ட் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல. எல்லா துறைகளிலும் இருக்கிறது. சில நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இது அவரவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தது.
எனக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்தது. இதனால் நானும் சில பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அது எந்த படம், எந்த இயக்குனர் என்று நான் கூற விரும்பவில்லை" என்று லதா ராவ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.