ஸ்வீட் வாய்ஸ்.! வலியுடன் கியூட்டாக சிரித்தபடியே பாடிய லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!



lakshmi-ramakrishnan-singing-video-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது பல பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறியதோடு, அதிர்ச்சியான தகவலையும் பகிர்ந்தார்.

அதாவது, லட்சுமி ராமகிருஷ்ணன்  தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு உடல்நிலை சரியில்லை. கொரோனா காலத்திற்குப் பின் என் மகளின் கர்ப்பபையில்  நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அது மருத்துவர்களின் அறிவுரைப்படி லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது. ஆறு மாதங்களாகியும் அவரது உடல்நிலை சரியாகவில்லை என கூறியிருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைவார் என ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது உடல்நலம் தேறி வரும் தனது மகள் பாடும் வீடியோவை வெளியிட்டு 'கடந்த 6 மாதமாக எனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பல பாடங்கள் கற்றுக்கொண்டேன். மிக முக்கியமாக, பலரது கருத்துக்களை கேட்பதற்கு முன்பு அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டாம். சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யுங்கள்
அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, உங்களிடம் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், சாதாரண அல்ட்ரா ஸ்கேன் அதற்கு போதாது என அறிவுரை கூறியுள்ளார்.