ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
தயவுசெய்து விட்ருங்க.. நல்லா சிரிச்சேன்! நக்கலாக லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு! அதுவும் ஏன்னு பார்த்தீர்களா!!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு, மூன்று மாதத்திலேயே அவரை விவாகரத்து செய்து சமூக வலைத்தளத்தில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார். அப்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணனும் அவர் குறித்து கருத்து வெளியிட்டு அது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில், நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா என கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் இந்த புகைப்படம் பிக்கப் டிராப் என்ற படத்திற்கான போட்டோஷூட் என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ரசிகர் ஒருவர் பவர் ஸ்டாரும், வனிதாவும் கன்னத்தோடு கன்னம் உரசி எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, எபிக் ஒரிஜினல் கேரக்டர். அக்காவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. குடும்பங்களை எப்படி மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்று பதிவிட்டு அதனை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்துள்ளார்.
இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், இது மிகவும் காமெடியாக இருக்கிறது என ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம். நன்றாக சிரித்தேன் என கண்களில் நீர் வரும் இமோஜியை பதிவிட்டுள்ளார்.