கவுண்டமணியிடம் சவால் விட்ட செந்தில், சாதித்து காட்டிய கவுண்டமணி.. என்ன நடந்தது.!?
"புயலில் உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்களை பாராட்டிய திரை பிரபலங்கள்!"
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் மிக்ஜாம் புயலாகி உருமாறி கடந்த 2 இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. நேற்று ஆந்திராவில் கரையைக் கடந்த புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல், பால், தண்ணீர், உணவு என்ற அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் தவிக்கத் தொடங்கினர். தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.
ஆனால் மழை நிற்காமல் பெய்து வந்ததால், மீட்பு பணிகள் தாமதமாகின. ஆனால் இந்தப் பெருமழையையும் பொருட்படுத்தாமல், மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் வெள்ளநீர் முழுதாக வடியாததால் மக்கள் அருகிலுள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் என ஏராளமானோர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் சேர்ப்பது, அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பது என்று ஈடுபட்டுள்ளனர். இவர்களை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.