ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ச்சே என்ன லவ்வு.! கணவருக்காக ஹன்சிகா செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்..
2003ம் ஆண்டு "எஸ்கேப் பிரம் தாலிபான்" என்ற ஹிந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2007ம் ஆண்டு "தேசமுதுரு" என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2011ஆம் ஆண்டு விஜய் நடித்த "வேலாயுதம்" படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம்-2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மனிதன், போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வட இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் கார்வா சவுத். இப்பண்டிகை கணவர்களின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்காக மனைவிகளால் விரதம் இருந்து பிரார்த்தனை செய்து கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
தனது பிசினெஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியாவை 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, தற்போது தனது கணவருக்காக இந்த கார்வா சவுத் பண்டிகையை விரதமிருந்து கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இச்செய்தி இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.