திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென்று மணிமேகலைக்கு என்ன ஆச்சு.? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் வருத்தம்.!
சின்ன திரையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. மேலும் விஜய் தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
விஜய் டிவியின் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார் மணிமேகலை. இந்நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று விலகிய மணிமேகலை, பின்பு தொகுப்பாளினியாக பங்கேற்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வரும் மணிமேகலை யூடியூபராகவும் பிரபலமானவராக காணப்படுகிறார்.
இது போன்ற நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் அடிபட்டு கட்டு போட்டு இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.