மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூஜா ஹெக்டேவிற்கு அவசர திருமணமா.? யாருடன் தெரியுமா.?
2012ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான "முகமூடி" திரைப்படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, 2022ல் வெளியான விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தமே 15 படங்களில் தான் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. பீஸ்ட்டிற்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த பூஜாவிற்கு அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் "ஜன கன மன" படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ஆக்ஷன் காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்த போது, தசைப்பிடிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே காதலிப்பதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.. ஆனால் இதுகுறித்து பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.