மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனிற்கு பதில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சிம்ரன். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்து வந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் சிம்ரன்.
இவ்வாறு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். சிம்ரனின் நடிப்பு திறமையிற்காக இன்றுவரை ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன என்று கூறினால் அது மிகையாகாது. இது போன்ற நிலையில் 2008 ஆம் வருடம் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம்.
இப்படத்தில் சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஸ்மந்தனா போன்ற பல நடிகைகள் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படமும் பாடல்களும் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தினை தற்போது திரையில் ரிலீஸ் செய்தால் கூட ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர். அந்த அளவிற்கு காதல் கதையை அற்புதமாக படமாக எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் சிம்ரன் இப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிம்ரனிற்கு முன்னதாக இப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவிருந்ததாக தற்போது செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் நடிக்காததால் சிம்ரன் நடித்தார் என்று கூறப்பட்டு வருகிறது.