மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் விசித்ராவின் சினிமா வாழ்க்கையை கெடுத்த நடிகர்.. பரபரப்பான செய்தி.!
1991ம் ஆண்டு "போர்க்கொடி" என்ற வெளியாகாத படத்தில் அறிமுகமானார் விசித்ரா. தொடர்ந்து அவள் ஒரு வசந்தம், சின்னத்தாயி, தலைவாசல், தேவர் மகன், அமராவதி, எங்க முதலாளி, ஜாதி மல்லி, ரசிகன், அமைதிப்படை, வண்டிச்சோலை சின்ராசு, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எதிர்மறை, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள விசித்ரா,கவர்ச்சியாக ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார். அதில் விசித்ரா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் இதையடுத்து விசித்ரா குறித்த பழைய செய்திகளை பலரும் தோண்டி வருகின்றனர்.
அதில் 2019ம் ஆண்டு மண்டகசாயம் என்ற ட்விட்டர் பக்கத்தில், தமிழில் விசித்ரா முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. ஆனால் சத்யராஜ் மாமாவால் அது போய்டுச்சு" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் ஒரே மாதிரி கதாப்பாத்திரங்கள் வந்ததால் என்னால நடிக்க முடியவில்லை என்று விசித்ரா கூறியிருக்கிறார்.