#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்வது சரியல்ல" மன்சூர் அலிகானை சரமாரியாக விளாசிய நீதிபதி..
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் கடந்த மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவை குறித்து கொச்சையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் த்ரிஷாவும் இந்த வீடியோவை பதிவிட்டு மன்சூர் அலிகானிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பிரச்சனை பூதாகரமானதாக வெடித்து தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து தமிழக காவல்துறைக்கு விசாரிக்க உத்தரவிட்டது.
இதன் பின்னர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை இணையத்தில் வெளியானது. இதன் பின்பு மன்சூர் அலிகான் நான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.
இது போன்ற நிலையில் தற்போது த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி போன்றவர்களின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு பொதுவெளியில் இப்படி அசிங்கமாக பேசிவிட்டு வந்து வழக்கு தொடுப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட த்ரிஷா அமைதியாக இருப்பதால் நீங்கள் சொல்வது சரி என்று ஆகாது என்று நீதிபதி மன்சூர் அலிகானை சரமாரியாக கேள்வி கேட்டார். இதன் பின்பு குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் 22ஆம் தேதி வழக்கு விசாரிப்பதாக தள்ளி வைத்துள்ளது.