வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!
ராம் - ஜானு :
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் 96. பள்ளி காலத்தில் தோன்றும் காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகையாக திரிஷா, நடிகராக விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தில் இவர்களது கதாபாத்திரத்தின் பெயர் ராம் - ஜானு என்பது.
மெய்யழகன் :
இந்த பெயரை இப்போது கேட்டாலும் ரசிகர்கள் நெகிழ்ந்து போவார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பிரேம்குமார் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இருவரையும் வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 96 பட இயக்குனர் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் இருந்தது.
96 பார்ட் 2 :
இப்படத்தை தொடர்ந்து பிரேம் குமார் அடுத்து எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக இருந்து வருகிறது. இப்போது ஒரு மாஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷா மற்றும் விஜய் சேதுபதி இருவருமே சமீப காலமாக படு பிஸியாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி :
இவர்களது கால்ஷீட் கிடைக்காமல் தான் படத்தின் இரண்டாம் பாகம் மிக தாமதமானதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைத்து இருப்பதாலும், பிரேம்குமாரும் தான் அடுத்த படத்திற்கு தயாராகி இருப்பதாலும் 96 பார்ட் 2வின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.