மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#LegandSuperStar: லெஜண்ட் படம் எப்படி?.. திடீர் பல்டி அடித்த கூல் சுரேஷ்.. கழுவி ஊத்திய பரிதாபம்.!
ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் - சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன், ஊர்வசி, மறைந்த நடிகர் விவேக், சுமன், நாசர் ஆகியோர் நடிப்பில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட் சரவணன். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு வந்து பதிலளித்த லெஜண்ட் சரவணன், "படம் ஒரே போர்., உட்காரவே முடியவில்லை. நண்பனிடம் சொன்னேன்., வேற படத்திற்கு போயிடலாம் என்று நினைத்தேன். அண்ணாச்சி நீங்கள் எதற்காக படம் எடுக்க வந்தீர்கள்?. துணிக்கடையிலேயே இருந்து அனைவரையும் வாழ வையுங்கள்" என்று கூறினால் விடியோவை அனைவரும் வாயை பிளந்து பார்ப்பீர்களே.
லெஜண்ட் படம் தரமான படம். வெந்து தணிந்தது காடு., லெஜண்ட்க்கு வணக்கத்தை போடு.. படத்திற்காக ஹீரோ ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டு இருப்பார் போல. விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருக்கு போட்டிக்கொடுக்கும் வகையில் தனது உடல் உழைப்பை வெளிப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர் போல மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை சென்றடைய செய்துள்ளார்.
இப்போது பலரும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நோயை ஒலிக்க வேண்டும் என பாடுபடுகிறார். ஹீரோ தகதகவென மின்னுகிறார். அவரை பார்க்கும் போதே Fire ஆக உள்ளது. வெள்ளிபோல மின்னுகிறார். வழுவழுவென முகம் மின்னுகிறது. படத்தில் லெஜண்ட்டின் பஞ்ச் சான்ஸே இல்லை. தியேட்டரை அலறவிட்டார்.
படத்தை கிண்டல் செய்வதற்கு வேலையே இல்லை. படம் அவ்வுளவு தரமாக உள்ளது. இந்த வயதிலும் நடனம் ஆடியுள்ளார். வசன உச்சரிப்பு என்பது மிகவும் சரளமாக உள்ளது. இந்திய அளவில் ஹிட்டடிக்கும். Emotional காட்சிகளில் அனைவரையும் கலங்கடித்துவிட்டார். அணைத்து கைதட்டும் லெஜண்ட்டையே சென்று சேரும்.
பல் இருப்பவன் பகோடா சாப்பிடுவது போல, ரோமன்ஸ் பளபளவென இருக்கிறது. கண்ணிலேயே காதல் செய்கிறார். தமிழ்நாட்டில் 2 சூப்பர் ஸ்டார், 2 உலக நாயகன், 2 இளையதளபதி, 2 தல தான் இனி. இவர் சிறந்த நடிகர் என்பதற்கு இப்படம் சாட்சி. அருமையாக நடித்துள்ளார். சிலர் (புளூ சட்டை மாறன்) சினிமாவை மட்டம்தட்டி பேசி சம்பாதிக்கிறார்கள். அவர்களை கண்டுகொள்ள வேண்டாம். அருள் உண்மையில் லெஜண்ட் சூப்பர்ஸ்டார் தான்" என்று பேசினார்.