மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பிரபல யூடியூபர்.. அசத்தல் தகவலால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விஜயின் லியோ படம் குறித்த அடுத்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் இளைய தளபதி விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரித்வி ராஜ் சுகுமாரன் உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் லியோ.
இந்த படத்தில் பல நடிகர்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், லோகேஷ் கனகராஜுடன் யூடியூபர் இர்பான் இணைந்து எடுத்துள்ள போட்டோ வெளியாகியுள்ளது.
படத்தில் நடிகர் விஜய் சாக்லேட் பேக்டரி வைத்திருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு முன்னோட்ட வீடியோ வெளியான நிலையில், சாக்லேட் பேக்டரி ரிவியூவராக இர்பான் படத்தில் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் உணவு சமைத்து வழங்கும் யூடியூபர்களை காட்சிப்படுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் யூடியூபர் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.