மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம மாஸ்... அந்த 20 நிமிஷத்துக்கு தான் படமே.! வெளியானது லியோ விமர்சனம்.! 1,000 கோடி வசூலை தொடுமா.?
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலி கான் இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன், சஞ்சய் தத் என முன்னணி நடிகர்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது.
இந்தத் திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் திரைப்படம் பற்றி தங்களது சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில் விஜய்க்கு ஓப்பனிங் சீன் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் தளபதி விஜய் ஆக்சன் மட்டும் அல்லாது நடிப்பிலும் தெறிக்க விட்டிருக்கிறார் என பதிவிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும் கடைசி 20 நிமிடத்தில் அர்ஜுன் மற்றும் விஜய் இடையே நடக்கும் மோதலும் அந்தக் காட்சிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த அனிருத் பிஜிஎம் வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் என பதிவு செய்து இருக்கின்றனர். இது போன்ற பாசிட்டிவ் விமர்சனங்களால் லியோ திரைப்படம் 1000 கோடியை தாண்டும் என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.