மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா.? திரையரங்கில் விஜய் ரசிகர்களின் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமா துறையில் மிகப் பெரும் பிரபலங்களாக வலம் வருபவர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் இணைந்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி, பிரியா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனையடுத்து நேற்று 'லியோ' படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றாலும் ஒரு சில ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு விஜய் இந்த ட்ரெய்லரில் கெட்ட வார்த்தைகள் பேசியிருக்கிறார். இதனால் இணையத்தில் சில சர்ச்சைகளும் உருவாகி இருக்கின்றன.
இது போன்ற நிலையில், லியோ திரைப்படத்தின் டிரெய்லர் பிரபல திரையரங்கு ஒன்றில் வெளியானது. இந்த திரையரங்கில் ட்ரெய்லரை பார்த்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் அங்கிருந்த இருக்கைகள் போன்ற பல விதமான பொருட்களை அடித்து நொறுக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மீதான அதிருப்தியை பலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Theatre ah salli Salliya ipdi Norukkiteeengale 😭
— Chennai Theatres (@TheatresChennai) October 5, 2023
Pathetic behaviour by such Fans.
Theatre owners take so much efforts to engage & arrange such celebration events.
Seeing this with so much pain 💔
This is going to cost them a lot now 😓pic.twitter.com/rM7adsxYSJ