மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெட்டப்பே மிரட்டலா இருக்கே.! ரியோ ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.! தொடங்கி வைத்த பிரபல சூப்பர்ஹிட் இயக்குனர்!!
சின்னத்திரையில் தொகுப்பாளர், சீரியல் நடிகர் என ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் ரியோ ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
வெள்ளித்திரையில் 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த ரியோ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவர் தற்போது விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார்.
இதில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ஹீரோயினாக நடிக்கின்றனர். இப்படத்திற்காக ரியோ தலைமுடி வளர்த்து கெட்டப்பையே மாற்றியுள்ளார். இந்த புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பிரபல இயக்குனர் லோகேஷ் கலந்துகொண்டு முதல் கிளாப் அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.