மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகராக களமிறங்கும் லோகேஷ்... இயக்குனர் யார் தெரியுமா.?
உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. நான் ரெடிதான் என்ற முதல் பாடல் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான நிலையில் இரண்டாவது பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லியோ திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அவரது திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றும் அன்பறிவு இயக்க இருக்கும் திரைப்படத்தில் அனிருத் மற்றும் லோகேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். மேலும் இந்த கதை பிடித்திருந்ததால் திரைப்படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் லோகேஷ். அவரிடம் 25 நாட்கள் இந்த பட குழு கால்சீட் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.