மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போடுங்கடா வெடிய... லியோ ரிலீஸை முன்னிட்டு தலைவர் 171 ஷூட்டிங் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171 வது திரைப்படத்தில் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சல் வரிசையில் இடம்பெறாது என சமீபத்திய அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்கான கதையை மாநகரம் திரைப்படத்திற்கு முன்பாகவே எழுதி இருந்ததாகவும் அப்போது இதில் சூப்பர் ஸ்டார் நடிப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறி இருந்தார்.
இவரது இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் திரிஷா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் படத்திற்கான சூட்டிங் எப்போது தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அவர் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் சூட்டிங் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ஜெய்பீம் இயக்குனரின் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.