திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"இந்த விஷயத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது" மனமுடைந்து பேசிய லோகேஷ்..
தமிழ் திரைத்துறையில் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2017ம் ஆண்டு "மாநகரம்" படத்தில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் நடித்து வெளியான "லியோ" திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதிலும் குறிப்பாக படத்தில் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் சிறப்பாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ், "இனிமேல் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தான் படம் பண்ணவேண்டும் என்ற கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளேன். ரிலீஸ் தேதி அறிவித்து விட்டு படம் பண்ணுவது ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறது.
ஒரு பெரிய படத்தை பத்து மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய அழுத்தம். திரும்பி பார்த்தால் என்ன ஆனதுனே தெரியாது. என்ன பண்றோம்னே தெரியாம வேகமா போகுது. அவ்வளவு வேகம் தேவையில்லை என்று கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.